திடீர் சுகயீனமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.
இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு அவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தார்.
Post a Comment