யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்போவளம் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காணப்படுகின்றனர்.
வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
54 மற்றும் 53வயதான இருண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Post a Comment