ஜேவிபியின் உண்மை முகம் அம்பலம்! சங்கை எடுக்க முழு உரித்துண்டு! சுரேன் - Yarl Voice ஜேவிபியின் உண்மை முகம் அம்பலம்! சங்கை எடுக்க முழு உரித்துண்டு! சுரேன் - Yarl Voice

ஜேவிபியின் உண்மை முகம் அம்பலம்! சங்கை எடுக்க முழு உரித்துண்டு! சுரேன்



தெற்கில் ஏற்பட்ட மாற்றம் என்பது வடகிழக்கில் ஏற்பட்ட மாற்றமல்ல. தமிழர்கள் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு கடந்த கால ஆட்சியாளர்களது நிலைப்பாடுதான் என்பதனை அவர்களே வெளிப்படுத்துவதன் ஊடாக  தமிழ் மக்கள் உணர வேண்டும்.

இவ்வாறு யாழில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்...

நடைபெறவுள்ள தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கி இருந்தாலும் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கிற எமது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. நாம் இடமெல்லாம் சங்குக்கு ஆதரவு பெருகி வருகிறது.

தமிழ்த் தேசியம் பேசி தங்கள் கட்சியை தென்னிலங்கையில் அடகு வைத்தவர்கள் இப்போது  சங்குக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். அதே போன்றே வீட்டு சின்னத்ணையும் தூக்கி கொண்டு ஓடி போனவர்கள் சங்குக்கு பெருகிவருகிற ஆணரஙைப் பார்த்து சங்குக்கு எதிராக கூக்குரல் இடுகின்றனர்.

ஏனெனில் ஒட்டுமொத்த மக்களும் விரும்புகிற அடிப்படையில் எமது கூட்டணி செயற்படுவதால் இத் தேர்தலில் தங்களை நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் வெறுமனே சங்குக்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்கின்றனர்.

அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து ஐனாதிபதி தேர்தலில் எடுத்துக் கொண்ட சக்கு சின்னத்தை சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அந்த அடிபடையில் தான் இப்போது எமது கூட்டணிக்கு எடுத்தீரக்கிறோம்.

அதுவும் பெரும்பாலானவர்களின் ஆதரவு ஒத்துழைப்புடன் சட்ட ரீதியாக தான் பெற்றுள்ளோம்.
சஆனால் அதை கூட சிலர் தமது தேவைகளுக்காக பொய்களை கூறி வருகின்றனர். அதே போலவே சில கட்சிகளும் தேல்விப் பயத்தில் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்.

உண்மையில் அந்த சங்கு சின்னத்தை நாங்கள் எடுக்காவிட்டால் அது இன்னொருவருக்கு சென்றிருக்கும். ஆனால் தமிழ் மக்கள் ஓண்றித்து ஆதரவை வழங்கிய அந்த சின்னத்தை நாங்கள் எடுத்தது நல்லதொரு விடயம். அதை நாங்கள் எடுப்பதற்கும் பாவிப்பதற்கும் எங்குக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.

இதேவேளை தெற்கில் ஏற.பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் அல்ல என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அனுரவின் ஆட்சி என்பது கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைப் போலவே தான் உள்ளது என்பதை அவர்களே வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க வேண்டும்.

அவர்களின் பகிரங்க அறிவிப்புக்கள் என்ன என்பதை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும். அதனைவிடுத்து அந்த தரப்புகளோடு மட்டுமல்லாது தெற்கு கட்சிகளோடு பதவிகளுக்காகவும் சுய நலன்களுக்காகவும் நிற்பவர்களை மக்கள் இனம்கண்டு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post