வைத்தியர் அர்ச்சுனாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice வைத்தியர் அர்ச்சுனாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

வைத்தியர் அர்ச்சுனாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு



வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ம் திகதி உத்தரவிட்டது.

இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகளை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post