யாழ் போதனா வைத்திய சாலைக்கு சுக்சி (sugshe group) குறூப் கம்பனியினால் நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது வைத்திய சாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவிற்கு வழங்கப்பட்டது
யாழ் போதனாவில் கண் சத்திரசிகிச்சை மருத்துவ உபகரணங்கள் தேவையாக உள்ளதென சுக்சி குறூப் கம்பனியின் தலைவர் கணேசன் சுகுமாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதற்கமைய கணேசன் சுகுமாரின் ஏற்பாட்டில் அவரின் பிரதிநிதியாக வந்திருந்த இரத்தினசபாபதி இளங்கோவினால் வைத்திய சாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னரும் சுக்சி குறூப் கம்பனியின் தலைவர் கணேசன் சுகுமாரால் யாழ் போதான வைத்தியசாலையின் மருத்துவ தேவைக்காக ஐந்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டு உள்ளதாகவும் இரத்தினசபாபதி இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இக் கம்பனியின் தலைவரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கும் பல்வேறு உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளதாகவும் இதுபோன்ற எதிர்காலத்தில் மேலும் பல உதவிகளை செய்ய எதிர்பார்த்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் அதேபோன்று சுக்சி கம்பனியின் பிரதிநிதிபள் எனப் பலரும் கலந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment