பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியினர் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்திதுறை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில. ஈடுபட்டிருந்த போது பருத்திதுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த இரு வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment