போலித் தேசியவாதிகளை அடியோடு நிராகரியுங்கள்! எம்மை ஆதரியுங்கள் - Yarl Voice போலித் தேசியவாதிகளை அடியோடு நிராகரியுங்கள்! எம்மை ஆதரியுங்கள் - Yarl Voice

போலித் தேசியவாதிகளை அடியோடு நிராகரியுங்கள்! எம்மை ஆதரியுங்கள்


தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் போலித் தேசிய வாதிகளை அடையாளங்கண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் நேர்மையாக பயணிக்கிற எமக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும். 

இதனூடாக நடைபெற போகிற மாற்றம் என்பது தமிழ்த் தேசிய கொள்கையுடன் தடம்மாறாமல் பயணிக்கிற எங்களுக்கான அங்கிகாரமாக பார்க்கிறோம்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பிலுள்ள அனைத்து இடங்களிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம். அதன் முதற்கட்டமாக இங்கும் அதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளோம்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இத் தேர்தல் ஒரு திருப்புமுனையாகும். அதுவும் எமது அமைப்பின் அரசியலுக்கு மட்டுமல்லாது தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு திருப்பு முனையாக உள்ளது.

தமிழர் தரப்பில் உள்ளவர்கள் 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்யும் அரசியலையே நேரடியாகவும மறைமுகமாகவும் முன்னெடுத்து வந்தனர்.

ஆனால் தமிழ்த் தேசியத்தை நோக்கி பயணிக்கிற ஒரே ஒரு தரப்பு நாங்கள் மட்டும் தான். ஆகையினால் தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் வழங்குகிற ஆணையாக இத் தேர்தலை பார்க்கிறோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதே போன்றே தமிழர் தாயகம்திலும் பெரிய மாற்றம் நடக்குமான எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்தை பேசிக் கொண்டு அதற்கு மாறாகச்  செயற்பட்டவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கிற எமக்கு ஆணையை கொடுக்க கூடிய தேர்தலாக பார்க்கிறோம்.

எமது அமைப்பினுடைய நேர்மையான அரசியல் நிலைப்பாட்டை மக்களிடத்தே கெண்டு செல்வதற்கு பல்வேறு சவால்கள் இருந்த போதிலும் அதனையெல்லாம் தாண்டியும் மக்களிடத்தே அதனை நாம் கொண்டு சென்றிருக்கிறோம்.

இதனால் போலித் தேசிய வாதிகளை மக்களும் இனங்கண்டுள்ள நிலையில்  தடம்மாற கொள்கையுடன் நேர்மையான அரசியலை முன்னெடுக்கிற எமது அமைப்பிற்கு ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்க வேண்டுமென கோருகிறோம்.

இதனூடாக நடைபெற போகிற மாற்றம் என்பது தமிழ்த் தேசிய கொள்கையுடன் நேர்மையாகவும் உண்மையாகவும் பயணிக்கிற எங்களுக்கான அங்கிகாரமாக பார்க்கிறோம்.

எனவே இன்றைக்கு மக்களும் உண்மைகளை உணர்ந்துள்ள நிலையில் நிச்சயம் மாற்றமொன்று ஏற்படும். அந்த மாற்றத்தின் ஊடாக தமிழர் தேசத்தில் அமோக வெற்றியுடன் நாம் மீண்டும் சந்திப்போம் என்றார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post