பார் லைசன்ஸ் பெறவில்லை என்ற சத்திய கடதாசியை சுமந்திரன் உடன் வழங்க வேண்டும் - Yarl Voice பார் லைசன்ஸ் பெறவில்லை என்ற சத்திய கடதாசியை சுமந்திரன் உடன் வழங்க வேண்டும் - Yarl Voice

பார் லைசன்ஸ் பெறவில்லை என்ற சத்திய கடதாசியை சுமந்திரன் உடன் வழங்க வேண்டும்



தமிழரசுக் கட்சியினர் பார் லைசன்ஸ் பெற்றதாக மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் போக்குவதற்கு சத்தியக் கடதாசியை வழங்கி சுமந்திரன் முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.

இவ்வாறு பொதுஐன பெரமுன கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது பார் லைசன்ஸ் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரித்ததாவது.

பார் லைசன்ஸ்சோ சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கவில்லை என சத்தியக் கடதாசி ஒன்றினை அண்மையில் கொடுத்திருந்தேன். 

அதே போல என்னுடைய சக வேட்பாளர்கள் இதில் முக்கியமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்திய கடதாசியை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். 

ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகிற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார் யார் இந்த பார் லைசன்ஸ்சை உண்மையில் பெற்றுக் கொடுத்தார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தாங்களாக தங்களுக்கு தேவையானவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியிருந்தார்கள. அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை பாராளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல. 

ஆகவே யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்த தயங்குகின்ற நிலைமை தான் உள்ளது.

ஆனாலும் இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இதனாலேயே இத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை என சத்திய கடதாசியை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.

ஆனாலும் இதுவரைக்கும் எவரும் அப்படியாக சத்திய கடதாசியை கொடுத்ததாகக் காணவில்லை. இவ்வாறான நிலைமையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்க்கிற போது சாரயக் கடை சம்பந்தமாக முன்னாள் எம்பி சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்து தீன் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில் தான் நாங்களும் சில அரசியல் விடயங்களை படித்துக் கொள்கிறோம். 

ஆகவே அவர் எங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரி தான். ஏனெனில் நாங்கள் இப்போது தான் புதிதாக அரசியலுக்குள் வந்திருக்கிறோம். அவர் எங்களை விட மூத்த கௌரவமான அரசியல்வாதி. அதனால் அவரை பெரும் மரியாதையோடு பார்க்கிறோம்.

எனவே நாம் கேட்டது போல அவர் ஒரு முன்மாதிரியாக ஒரு சத்திய கடதாசியை கொடுக்க வேண்டும். ஏனெனில் சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டுமென ஐனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர்.

அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்திய கடதாசியை கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியகடதாசியை கொடுக்கச் சொல்லி கேட்கலாம். ஏனெனில் அவருடன் அரசியல் செய்பவர்கள் தான் இம்முறை அந்தக் கட்சியில் பாராளுமன்ற தேர்தலும் கேட்கின்றார்கள்.  ஆகவே தான் இதனை முன்மாதிரியாக செய்யுங்கள் என சுமந்திரன் அவர்களை மரியாதையுடன் கேட்கிறோம்.

ஏனெனில் வாக்களித்த மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அதாவது பார் லைசன்ஸ் வாங்கினார்களா இல்லையா என்பது தெரிய வேண்டும். அதைவிடுத்து யாரையும் சேறு பூசுவது எங்களது நோக்கமும் அல்ல. 

இவ்வாறு சத்திய கடதாசியை வெளிப்படுத்தியதன் பின்னர் யாரும் பார் லைசன்ஸ் வாங்கினார்களா இல்லையா என்று உண்மை தெரிய வந்ததன் பின்னர் மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அதனால் தான் சுமந்திரன் அவர்களை மிக மரியாதையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்கள் கட்சியை களங்கம் இல்லாத கட்சியாக காட்ட வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிற படியினால் நீங்கள் இதனைச் செய்யுங்கள்.

நாங்கள் கிராமங்கள் தோறும் மக்களிடம் செல்கிற போது தமிழரசுக் கட்சி ஆட்கள் பார் லைசன்ஸ் வாங்கியதாகத் தான் சொல்கின்றார்கள். 

உங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தை போக்குவதற்கான ஒரே ஒரு நபர் நீங்கள் தான். உங்களால் தான் இந்த களங்கத்தை போக்க முடியும். ஆகவே சத்தியகடதாசியக கொடுத்து முன்மாதிரியாக செயற்படுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post