இவ்வாறு ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..
ஆனால் கிழக்கிலே திருகோணமலை மற்றும் அம்பாறையில் மாவட்டங்களில் தமிழ்ச் சமூகம் பலவீனமான நிலையில் இருக்கிறது.
அதனால் அங்கு தமிழர் தரப்பில் ஆக்க் குறைந்த்து ஒரு ஆசனம் எடுப்பதென்றால் கூட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கேட்டால் தான் சாத்தியமாகும் என்ற நிலைமை உள்ளது.
ஆகையினால் இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் தான் நாங்கள் சில தீர்மானங்களை எடுக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாகத் தான் தமிழரசுக் கட்சியுடன் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கிறோம்.
இதற்கமைய அவர்களுக்கும் எங்களுக்கும் நடைபெறும் பேச்சுக்களின் நிமித்தம் திருகோணமலையில் தமிழரசுக்கட்சி சின்னத்திலும் அம்பாறையில் சங்கு சின்னத்திலும் போட்டியிடுவது தொடர்பில் கருத்தளவில் ஒத்துக்கொண்டு இருக்கிறோம்.
ஏனெனில் இந்த இரண்டு மாவட்டத்திலும் எங்கள் பிரதிநிதித்துவம் இழக்கிற நிலைமை உள்ளது. ஆகவே தமிழரசுக் கட்சியும் இதை உணர்ந்து கொண்டு திருமலையில் வீட்டிலும் அம்பாறையில் சங்கிலும் போட்டியிடுவதன் மூலம் ஆக்க் குறைந்த்து நாங்கள் ஒவ்வொரு பிரதிநித்துவத்தையாவது
உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும். அந்த வகையில் தொடர்ந்தும் நாங்கள் முயற்சிப்போம்.
இதேவேளை கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகும் பட்சத்தில் நிச்சமாக நாம் அங்கும் போட்டியிடுவோம் என்றார்.
Post a Comment