சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது! அனுரவிற்கு கஜேந்திரகுமார் பதிலடி - Yarl Voice சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது! அனுரவிற்கு கஜேந்திரகுமார் பதிலடி - Yarl Voice

சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது! அனுரவிற்கு கஜேந்திரகுமார் பதிலடி



தெற்கிலுள்ள சிங்கள மக்களின் ஆணையை பெற்றுக் கொண்ட அனுர அரசாங்கம் வடகிழக்கு மக்களின் உரிமையை உதாசீனம் செய்ய கூடாது. அவ்வாறு செய்வதற்கு நாம் இடமளிக்கப் போவதும் இல்லை. எம்மாளான நெருக்கடிகளை நிச்சயம் நாம் வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..

குறிப்பாக சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத்  ஏளனமாகவும் மிரட்டலாகவும் அதேநேரம் தாம் அதனை எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

அமைச்சர் விஜித  ஹேரத்தின் இந்த இறிக்கையை நாம் கடுமையாக எதிராக்கிறோம். இப்போது அவர்கள் சோல்வதற்கும் முன்னர் சொன்னதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக சமஷ்டி ஆட்சி முறை தொடர்பாக பேசுவதற்கோ நடைமுறைப்படுத்துவதற்கோ தமக்கு எந்தவித இணக்கமும் கிடையாது என்று கூறியிருக்கின்றார். அது மட்டுமல்லாது சமஷ்டி ஏன்ற இந்த விடயத்தை தாங்கள் அனுதிக்கப் போவதில்லை 

இந்த கருத்துக்கள் என்பது தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் கால்வைக்க விரும்குகிற நிலையிலும் இந்த நேரத்தி்லும் துணிந்தும் கருததுக்களை முன்வைக்க காரணம் தெற்கு இனவாதமே தான். 

கடந்தகாலத்தில்  நல்லாட்சி என்று சொல்லப்பட்டு புதிய அரசியலைம்ப்பு உருவாக்கப்பட்டிருந்த்து. அது உண்மையிலையே ஒற்றையாட்சி அரசியலைம்ப்பு ஒற்றையாட்சி முறைமை என அனைவருக்கும் தெரிந்திருக்கிற நிலையில் அதனை கொண்டு வருவதொகை சொல்வது ஏற்கத்தக்கதல்ல. 

ஏனேனில் தெற்கின் ஆணையை வைத்து வடகிழக்கு மக்களின் உரிமையை மிதிக்க முடியாது அல்லது உதாசீனம் செய்ய முடியாது.  எனவே வடகிழக்கு மக்களின் உரிமையை விருப்பத்தை நிலைநாட்டும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும்.

ஆகையினால் தமிழ் மக்கள் விரும்பாத அல்லது ஏற்றுக் கொள்ளாத வகையில்  செயற்படுமிடத்தே ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்

ஏனெனில் அதற்கும் நாங்கள் மட்டும் தான் அந்த நிலைபாட்டில் இருக்கிறோம். ஆனால் ஏனைய தரப்பினர்களை போல நாங்கள் ஏமாற்றவில்லை.  ஆகையினல் வ முழுமையான சமஷ்டியை விட்டுக் கொடுக்காத சமஷ்டி வழங்கப்பட வேண்டுமென நாம்  வலியுறுத்துகின்றோம் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post