யாழில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! - Yarl Voice யாழில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! - Yarl Voice

யாழில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!



யாழ்ப்பாணம் - மயிலங்காடு
பகுதியில் தோட்ட கிணற்றில் இருந்து
குடும்பஸ்தர் ஒருவரது சடலம்
மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம்
நேற்றையதினம் மீட்க்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச்
சேர்ந்த சுவாம்பிள்ளை பவி (வயது- 46)
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய
வருகையில்,

கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து குறித்த
நபர் வெளியில் சென்றதாக உறவினர்கள்
தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இரண்டு தினங்களாக அவரை காணாத நிலையில் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்
அவரது சடலம் நேற்றையதினம் தோட்டக்
கிணறு ஒன்றில் இருந்து
மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உடற்கூற்று
பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post