தமிழர்கள் விடயத்தில் அனுர அரசும் முன்னைய ஆட்சியாளர்களை போலவே ஏமாற்று வித்தைகளை காட்டத் தொடங்கி உள்ளது. இதனால் அனுர அரசு மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு குறைவடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இவ்வாறு ஈபிஆர்எல்எப் தலைவரும் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..
மக்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அனுரகுமார ஐனாதிபதியாக வந்திருக்கின்ற நிலையில் உண்மையாகவே ஐனாதிபதி மீதான எதிர்பார்ப்பு எந்தளவில் உள்ளது என்பது தற்போது கேள்விக் குறியாக உள்ளது.
குறிப்பாக ஐனாதிபதி மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு என்பன குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. இதனால் பெரும் நம்பிக்கை அடிப்படையில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு இப்போது ஏமாற்றமே கிடைக்கின்றன.
இவ்வாறான நிலைமையில் அரச கட்சியை பொறுத்தவரையில் தாங்கள் தான் தமிழ் மக்களுக்கு ஏதோ செய்வதாக கட்டுவதற்கு முயற்சிகின்றனர். அதனை எமது மக்கள் தெளிவாக முதலில் விளங்கி கொண்டு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக அனுரவின் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்காக பலதைச் செய்வதாக சொல்லி இருந்தது. ஆனால் அவ்வாறு கூறிய எதனையும் அனுர தரப்பு இதுவரையில் செய்யவில்லை.
அதிலும் பங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என்று ஐனாதிபதி தேர்தல் காலத்தில் சொன்னவர்கள் இப்போது நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தொனியில் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில்
தமிழ் மக்களுக்கு தாங்கள செய்வதாக கூறிய எந்த விடயத்மையும் செய்யாமல் இருப்பது மாத்திரமல்லாது மாறாக இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
அதில் மாகாண சபை தேர்தலை இப்போது நடாத்த போவதில்லை, பயங்கரவாத தடை சட்டம் நீக்கபடாது, காணிகள் விடுவிப்பில் திட்டவட்டமான முடிவில்லை ஆனாலும் வீதிகளை தான் திறப்பதில் கவனம், ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி கொண்டு மிக மிக ஊழல் பேர்வழிகளையே நியமனம் செய்கிறார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக இருக்கிறார்களா? சமத்துவம்? தமிழ் சிங்கள முஸ்லிம் என பாகுபாடு இல்லாமல் இருக்கிறார்களா? என்றால் அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் அதற்கு எதிராகத் தான் இருக்கிறது.
இவ்வாறான சூழலில் தமிழ் மக்கள் பலமான பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அதுவும் தமிழர் தரப்பு ஒன்றாக ஐக்கியப்பட்டு போவதன் ஊடாகத் தான் தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் எப்போதும் ஐக்கியப்பட்டு செயற்படவே விரும்புகிறோம். இதற்கான அழைப்புக்களை கூட பலதடவைகள் தமிழரசுக் கட்சிக்கு விடுத்திருக்கிறோம்.
தமிழரசின் உள்வீட்டிற்குள்ளே ஏற்பட்ட குழப்பங்களால் அவர்கள் நீதிமன்றம் வரை சென்று அதிலிருந்து பிரிந்து சுயேட்சையாக கேட்கும் அளவிற்கு கூட வந்திருக்கிறார்கள். ஆகவே இவ்வாறான குழப்பங்களை தமது கட்சிக்குள்ளேயே இவர்கள் முதலில் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த பலமான வலுவான சக்தி பாராளுமன்றம் செல்ல வேண்டியது அவசியம். அதற்கமைய மக்கள் தமது முழுமையான ஆதரவை எமக்கு வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment