"வலிமை மிகு வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. உரத்தோடும் உறுதியோடும் எனது தமிழ்த் தேசியப் பயணம் தொடரும்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகப் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் ஏற்று வலிமை மிகு வாக்குகளால் ஆணை வழங்கிய மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி!
உரத்தோடும் உறுதியோடும் எனது தமிழ்த் தேசியப் பயணம் தொடரும்.
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” - என்றார்.
Post a Comment