யாழில் மதத் தலைவர்களிடம்
ஆசி பெற்ற சிறீதரன் எம்.பி.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன், நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பத்மதயாளன் அடிகளார் மற்றும் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தினதும் சிவபூமி அறக்கட்டளையினதும் தலைவர் கலாநிதி.ஆறுதிருமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து, அவர்களிடம் ஆசி பெற்றார்.
இதன்போது தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயல் நோக்குகள், முன்கொண்டு செல்ல வேண்டிய விடயங்கள் குறித்தும் சிறீதரன் கலந்துரையாடியிருந்தார்.
Post a Comment