இவ்வாறு தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்..
தமிழ் மக்களுக்காகவே எப்பதும் செயற்படுகிற இத்தகைய நீண்ட பாராம்பரியங்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியை மட்டும் இப்போது பலரும் திட்டமிட்ட வகையில் குறிவைத்து தாக்குதல் நடாத்துகின்றனர்.
எமது கட்சிக்கு எதிராக பல்வேறு வகையிலும் தாக்குதல்களை நடாத்தினால் மக்கள் தம்மை ஏற்று கொள்வார் என்ற நினைப்பில் தான் செய்கிறார்கள்.
இதனைச் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் எங்களுக்கு வெளியில் இருந்தவர்களும் எங்களோடு இருந்து பதவிகளுக்காக வெளியில் சென்றவர்களும் தான்.
அதிலும் இத்தேர்தலை எடுத்துக் கொண்டால் கட்சியில் தமக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்று பதவிகளுக்காக வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு அணிகளில் நிற்பவர்கள் தான் அதிகமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது மாத்திரமல்லாமல் தமிழரசுக் கட்சியே அழுந்துவிடும் என்று கூட இவர்கள் இப்போது கூறி வருகின்றனர். இவ்வாறு பதவிகளுக்காக வெளியே சென்றவர்கள் தமிழரசுக் கட்சியை அழிக்க வேண்டுமென துடிப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
இந்த தமிழரசுக் கட்சி தனிநபர் கட்சி அல்ல. அது அழிந்துவிடும் என எந்த மனச்சாட்சியோடு இவர்கள் சொல்கின்றனர் எனத் தெரியவில்லை.
உண்மையில் எமது மக்களின் உரிமை சார்ந்த பயணத்தை செய்வது தமிழரசுக் கட்சி தான். நாம் கடந்து வந்த பாதைகள் போராட்டங்கள் என்ன என்பதை மக்களே அறிவார்கள். ஆனாலும் ஒரு ஜனநாயக்க் கட்சி என்ற அடிப்படையில் எமது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.
அதிலும் பதவிகள் தான் முக்கியம் ஏன்றவர்கள் தான் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் பதவிகள் முக்கியம் இல்லை என்பவர்கள் முரண்பட்டாலும் கட்சியிலே தான் இருப்பார்கள்.
யார் என்ன சொன்னாலும் எதைச் செய்தாலும் தமிழரசுக் கட்சி எப்போதும் தமிழ் மக்களின் ஆதரவுடன் நிலைத்து நிற்கும்
அடிப்படை கொள்கையில் மாறாமல் நிலைத்து நிற்கிறோம். ஆட்கள் மாறலாம் கொள்கை மாறாமல் இக் கட்சி இருக்கும். அதில் நாங்கள் எப்போதும் ஓன்றாக பயணிப்போம். அதனடிப்படையிலே எமது பயணங்களும் தொடரும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இம்முறை புதுசா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சமகாலத்திற்கு ஏற்றவாறு சில விடயங்கள் இதிலே உள்ளடக்கப்பட்டுள்ளது.
இங்கே நாங்கள் யதார்த்தமாக சிந்தித்தால் 4 ஆசனங்களை பெறலாம். வடகிழக்கில் ஒரே கட்டமைப்பில் உள்ள கட்சி என்ற வகையில் பலமான அமைப்பாக நாமே இருக்கிறோம்.
இதில் எது எப்படியிருப்பினும் எமது கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் சில தற்போதும் இருக்கின்றன. ஆகையினால் அந்த முரண்பாடுகளை களைந்து நாம் ஒரே கட்சியாக ஒன்றாக செயற்படுவோம் என்றார்.
Post a Comment