இவ்வாறு ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சுரேன் குருசாமி குற்ளச்சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுரேன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
முக்கியமான ஒரு தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவது தமிழ் மக்களின் வாக்ககளைப் பிரிப்பதற்காகவே என்பது தெளிவாகின்றது.
இவ்வாற போட்டியிடும் பல தரப்பினரும. தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக தெரியவில்லை. தங்களுடைய பதவிகளைப் பெறுவதற்காகத் தான் என்பது தெளிவாகின்றது.
ஆகவே தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக சிந்தித்து தமிழ்த் தேசியக் கொள்கையுடன் பயணிக்கிற வடக்கு கிழக்கு முழுவதும் ஒற்றுமையை வுளிப்படுத்தி நிற்கிற ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
அது தான் தமிழ் மக்களின் பலமான பிரதிநிதித்துவத்தையும் எதிர்பார்க்கிற மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
மென்னிலங்கை நிகழ்ச்சி நிரலோடு தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு அதன் போர்வையிலே பயணிக்கின்றவர்களை அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.
கடந்த ஐனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சியோடு சேர்ந்து வாக்கு கேட்டவர்கள் இப்போது தமக்கு வாக்களிப்பது தான் தமிழ் தேசியம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தெற்கில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தங்களுடைய கட்சியினருக்கு மாத்திரம் அமைச்சு பதவிகளை வழங்குவோம் என்று கூறி வருகின்ற சூழலில் தமிழ் தரப்பிலே தேசியம் பேசிக் கொண்டிருக்கும் கட்சிகள் தாங்கள் அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பில் பரிசீலிப்போம் சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கிறோம் என கூறுகின்றனர்.
அதுவும் வேண்டாம் என்று கூறுகின்ற அரசாங்கத்திடம் வலிந்து சென்று ஒரு பிச்சை கேட்பது போல அமைச்சுப் பதவிக்காக தங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆகவே தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது சுயேட்சைகள் மாத்திரமல்ல தேசியம் பேசுகிறவர்களும் தெற்கில் ஆட்சி அமிகாரத்தில் இருக்க கூடியவர்கள் பதவி கொடுக்க விட்டாலும் முழங்காலில் நின்று கூட இந்தப் பதவிகளை பரிசீலிக்கிறோம் எதிர்பார்க்கிறோம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று கூறுகின்றனர்.
தங்கள் பதவிகளுக்காக தேசியம் பேசி ஏமாற்றுபவர்களை நிராகரித்து ஒற்றுமையாக ஒரே கூட்டணியாக போட்டியிடும் எமது கூட்டணியை ஆதரித்து பலப்படுத்துங்கள் என்றார்.
Post a Comment