இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
கடந்த ஐனாதிபதித் தேர்தலில் எங்கள் மீது வேண்டுமென்றே போலியாக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய ரணில் சஜித் உள்ளிட்ட தரப்பை மக்கள் தூக்கியெறிந்திருக்கிறார்கள். இதனை அத் தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக் காட்டியும் இருக்கின்றன.
அதேபோன்று தமிழ் தலைவர்களே நீங்கள் இனியும் தமிழ் மக்களுக்கு தன்ணி காட்டுவதற்கு எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவீர்கள் என்றால் அல்லது சேறு பூசுவீர்களாக இருந்தால் தேர்தல் முடிந்ததன் பிறகு நிச்சயமாக நீங்களும் தமிழ் மக்களாலேயே வீசி எறியப்படுவது தவிர்க்க முடியாதது.
ஆனால் நீங்கள் அனைவரும் வரவிருக்கும் இந்த புதிய பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஆகையினால் அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்கள் நம்பக் கூடிய விதமான நடவடிக்கைகளை அல்லது பிரச்சாரங்களை நீங்கள் முன்னெடுங்கள்.
குறிப்பாக தமிழ் மக்கள் இப்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கிற பொருளாதார சமூக அரசியல் சம்பந்தமான பிரச்சனைக்கு கொள்கை ரீதியான விளக்கங்களைக் கொடுங்கள்.
அவ்வாறு விளக்கங்கள் மாத்திரமல்லாமல் அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான திட்டங்களை வகுங்கள். அந்த திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள்.
அந்த திட்டங்களை உங்கள் கொள்கையாக வகுத்துக் கொண்டு அந்தக் கொள்கை பற்றிப் பேசுவீர்களாக இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பீர்களாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்கள் உங்களை வரவேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆனால் இனிமேலும் இந்த நாட்டில் இனவாதம் மதவாதம் என்று கூறி தமிழர்களையும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையிம் பேகரையும் மலையகத்தையும் இனவாத அடிப்படையில் பிரித்து ஒதுக்குவதற்கு நீங்கள் முற்படுவீர்களாக இருந்தால் அது இனிச் செல்லுபடியாகாது என்பதையும் சொல்லிக் கொள்கிறோம் என்றார்.
Post a Comment