யாழில் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்! - Yarl Voice யாழில் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்! - Yarl Voice

யாழில் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்!



யாழில் சுயேட்சை குழுவாக மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் புவனேஸ்வரன் வசந்தராஜின் வீட்டின் மீது வன்முறைக்கும்பல்  அத்து மீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. 

இதன் பொழுது வேட்பாளரின் தந்தை காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் உள்ள சனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சை குழு  14 இன் வேட்பாளர் புவனேஸ்வரன் வசந்தராஜ்ஜின்
வீட்டின் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்குள் நேற்று இரவு அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று வேட்பாளரின் தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய அதேவேளை வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.

மேலும் அயல் வீட்டின் மீதும் தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற இதேவேளை குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞரின் கை மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post