சிஎஸ்கேவை பதம் பார்க்கும் நாகினிகள்! ஒரு வீரரை எடுக்காததால், ஒரு நாட்டையே இழந்த CSK - Yarl Voice சிஎஸ்கேவை பதம் பார்க்கும் நாகினிகள்! ஒரு வீரரை எடுக்காததால், ஒரு நாட்டையே இழந்த CSK - Yarl Voice

சிஎஸ்கேவை பதம் பார்க்கும் நாகினிகள்! ஒரு வீரரை எடுக்காததால், ஒரு நாட்டையே இழந்த CSK



ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வீரர்களை தேர்வு செய்து இருப்பதாக பலரும் பாராட்டியுள்ள நிலையில் ஒரு நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டும் சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி 20 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து சிஎஸ்கே அணி 7 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். இந்த தருணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய முஸ்தபிசுர் ரஹ்மான் நடப்பு மெகா ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை.

சிஎஸ்கே அணி முஸ்தபிசுர் ரஹ்மானை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெயர் வந்ததும் சிஎஸ்கே அணி அமைதியாகிவிட்டது. அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை முஸ்தபிசுர் ரஹ்மான் நிர்ணயித்து இருந்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் கேட்கவில்லை. இதை அடுத்து முஸ்தஃபீசூர் ரஹ்மான் விலை போகவில்லை.

சிஎஸ்கே தான் எடுக்கவில்லை கேகேஆர் அல்லது மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் முஸ்தஃபீசுர் ரகுமானை எடுக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி மீது வங்கதேச ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணி எடுத்த போது ஒட்டுமொத்த வங்கதேச ரசிகர்களும் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளித்தார்கள். சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே எந்த பதிவு போட்டாலும், அதனை பின்தொடர்ந்து பாராட்டுவார்கள். ஒரு சில நேரத்தில் முஸ்தபிசுர் பிளேயிங் லெவனில் இல்லை என்றால் வங்கதேச ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைப்பார்கள்.

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாகவே சிஎஸ்கே அணி முஸ்தபிசுர் ரஹ்மானை புறக்கணித்து விட்டதால் இம்முறை தாங்கள் சிஎஸ்கே அணியை பின்தொடர்வதில்லை என்று வங்கதேச ரசிகர்கள் காட்டமான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் சிஎஸ்கே வின் சமூக வலைத்தள பதிவுகளின் பின்னூட்டங்களில் வங்கதேச ரசிகர்கள் ஆக்கிரமித்து திட்டி வருகின்றனர். இதை குறிப்பிட்டு வேறு அணி ரசிகர்கள், சிஎஸ்கே அணி ஒரு வீரரை எடுக்காமல் விட்டதால் ஒரு நாட்டையை இழந்து விட்டதாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post