பண்டை என் சகோதரர் போல் நினைத்தேன்!அணியை விட்டு செல்ல கூடாது என முயன்றேன்- DC உரிமையாளர் - Yarl Voice பண்டை என் சகோதரர் போல் நினைத்தேன்!அணியை விட்டு செல்ல கூடாது என முயன்றேன்- DC உரிமையாளர் - Yarl Voice

பண்டை என் சகோதரர் போல் நினைத்தேன்!அணியை விட்டு செல்ல கூடாது என முயன்றேன்- DC உரிமையாளர்



ஐபிஎல் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ரிஷப் பண்ட், டெல்லி அணிக்காக மட்டும்தான் விளையாடி வந்தார். கிட்டத்தட்ட 111 போட்டிகள் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 3,284 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், 18 அரை சதம் அடங்கும்.

டெல்லி அணியில் சாதாரண இளம் வீரராக வந்து கேப்டன் வரை உயர்ந்த பண்ட், திடீரென்று அணியை விட்டு விலக முடிவு எடுத்தார். இதற்கு காரணம், டெல்லி அணியின் பங்குகளை வேறு ஒரு நிறுவனம் பாதி வாங்கியதால் நிர்வாகத்தில் சில மாற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து பண்ட் அதனை விரும்பாமல் அணியை விட்டு சென்றுவிட்டார்.

தற்போது பண்டை 27 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி தேர்வு செய்திருக்கிறது. இந்த சூழலில் பண்ட் டெல்லி அணியிடம் இருந்து பிரியாவிடை பெற்றார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரிஷப் பண்ட், இளம் வீரராக வந்து என்னை பல ஆண்டுகள் பார்த்துக் கொண்ட டெல்லி அணிக்கு நன்றி. உங்களுடன் இருந்த என்னுடைய பயணம் மகிழ்ச்சியாக இருந்தது.

ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டு நான் வாழ்நாளில் கடினமான நிலையில் கூட எனக்கு துணை நின்று ஆதரவளித்தார்கள். ஒரு குடும்பம் போல் நான் இருந்தேன். இந்த பயணம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. குட்பாய் சொல்வது அவ்வளவு எளிதல்ல என்று பண்ட் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜிந்தால், பண்ட், நான் உங்களை எப்போதும் போல் என்னுடைய இளைய சகோதரராகத்தான் பார்க்கின்றேன்.

என்னுடைய மனதில் அடித்தட்டில் இருந்து நான் உங்களை எப்போதும் போல் நேசிக்கின்றேன். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பல முயற்சிகளை எடுத்தேன். நான் உங்களை எனது குடும்ப உறுப்பினர் போல் தான் பார்த்தேன். எனினும் நீங்கள் அணியை விட்டு செல்வது எனக்கு மன வருத்தமாக இருக்கின்றது. இதை நினைத்து நான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டேன்.

நீங்கள் எப்போதுமே டெல்லி அணியின் ஒரு முக்கிய வீரர் தான். ஒரு நாள் நாம் இருவரும் மீண்டும் இணைவோம் என்று நம்புகிறேன். எங்கள் அணிக்காக நீங்கள் செய்த பல விஷயங்களுக்கு நன்றி. நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள். சென்று வாருங்கள் சாம்பியன்! உலகமே உங்கள் காலடியில் தான் இருக்கின்றது. டெல்லி அணிக்கு எதிராக நீங்கள் விளையாடும் ஆட்டத்தை தவிர நான் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று ஜிந்தால் பதில் அளித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post