யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு! - Yarl Voice யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு! - Yarl Voice

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!



யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மண்கும்பான் – கறுப்பாச்சி அம்மன் கோவிலடி பகுதியில் இன்றையதினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை பகுதியில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் மீது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளதுடன்,

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த  இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரின் பின்பக்கம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், காரின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post