யாழில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! - Yarl Voice யாழில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! - Yarl Voice

யாழில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!



யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது 28 பேரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் எலிக்காய்ச்சலால் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.

இதுவரை யாழ்ப்பாணத்தில் இந்நோய் காரணமாக 7 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post