கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகள் உடனடியாக மூடும்படி வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பு மற்றும் மது போதைக்கு எதிரான இயக்கம் ஆகியவற்றினுடைய ஒழுங்கு படுதலில் கண்டனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது
இந்த பேரணி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான மக்களின் பங்களிப்புடன் இன்று (24.12.2024) கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த கண்டனப்பேரணியில் சர்வமத தலைவர்கள் ,மதுபோதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் மாகணசபை உறுப்பினருமான சுகிர்தன் அவர்களும், கிளிநொச்சிமாவட்ட பொது அமைப்புக்கள்,வர்த்தக சங்கத்தினர் மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அரசே அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலைகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் போரால் மெல்ல மெல்ல மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தை மதுபோதையால் அழிக்காதே, மக்களினுடைய எண்ணிக்கைக்கு அதிகமாக மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் அவற்றை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் முன்னிலையில் ஜனாதிபதிக்கான மகஜர் சர்வ மதகுருக்களினால் கிளிநொச்சி மாவட்ட செயலக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
Post a Comment