செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயில் மோதி உயிரிழப்பு! - Yarl Voice செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயில் மோதி உயிரிழப்பு! - Yarl Voice

செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயில் மோதி உயிரிழப்பு!



அனுராதபுரம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்தனர்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக இரத்தினபுரியிலிருந்து வருகைதந்த இருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்தில் மோதிய நிலையில் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரத்தினபுரியை சேர்ந்த 37 வயதுடைய தாயும், 18 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post