அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு கிடைக்க வேண்டிய உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் எரிபொருள் கொடுப்பனவை குறைக்க தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 2025 ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் இரு உத்தியோகபூர்வ வாகனங்களாக குறைக்கப்பட்டு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு (டீசல்) 900 லீற்றராக குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் திரு.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஒரு அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதுடன் மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் டீசல் வழங்கப்பட்டது.
இது தொடர்பில் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவில் 1050 லீற்றர் டீசல் குறைக்கப்பட்டுள்ளது.
Post a Comment