தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்...
21 ஆம் தேதி ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தேன்.
அன்றைய தினம் விசாரணைக்கு சமூகம் அளிக்க முடியாதற்கான காரணத்தை தெரிவித்து குறித்த விசாரணையை 23ஆம் திகதிக்கு மாற்றித் தருமாறு என்னால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு குறித்த விசாரணைக்கு சமூகம் அளித்திருந்தேன்.
உப பொலிஸ் பரிசோதகர் டில்ரங்கா குறித்த விசாரணையை முன்னெடுத்த நிலையில் எனது வாக்குமூலத்தை தமிழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிஷாந்தினி பதிவு செய்தார்.
2023.09.17ம் திகதி தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி திருகோணமலை சர்தாபுரத்தில் காடையர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில் 16 மாதங்கள் கடந்து குறித்த விசாரணை இடம்பெறுவது தொடர்பில் எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.
நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு எனது பதிலை வழங்கியிருந்ததுடன் தியாக தீபம் திலீபனின் அரசியலை முன்னெடுக்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக எனது தரப்பு நியாயத்தினை முன் வைத்திருந்தேன்.
"எனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும், திலீபனும் காவி நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன்.இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன்." என்பதை நான் பதிவு செய்தேன்.என தெரிவி்த்தார்.
Post a Comment