கண் சத்திர சிகிச்சை நோயளர்களின் காத்திருத்தல் காலத்தை இல்லாதொழித்த விசேட வைத்திய நிபுணர் மலரவனை பாராட்டிய பணிப்பாளர் நாயகம்!
யாழ் போதானா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மலரவன் வட மாகாணத்திலும், வட மாகாணத்திற்கு வெளியிலும் தமது சேவையினை முழுமையாக ஆற்றியதன் மூலம் காத்திருத்தல் காலத்தை இல்லாது செய்துள்ளார்.
வைத்திய நிபுணர் மலரவன் மற்றும் அவருடைய மருத்துவ குழுவினர் எவ்வாறு வினைத்திறனாக கண்புரை சத்திரசிகிச்சைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொண்டார்கள் என்ற அனுபவப் பகிர்வினை இன்றைய தினம் (23) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் இடம்பெற்ற உயர் நிலை சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் ஏனைய பணிப்பாளர்களுடன் கலந்துரையாடினார் .
அவருடைய மருத்துவ குழுவினர்களின் சேவைகள் அனைவராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment