கஜேந்திரகுமார் தமிழலசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை! அழைத்தால் பரிசீலிக்க தயார்! சிவஞானம் அறிவிப்பு - Yarl Voice கஜேந்திரகுமார் தமிழலசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை! அழைத்தால் பரிசீலிக்க தயார்! சிவஞானம் அறிவிப்பு - Yarl Voice

கஜேந்திரகுமார் தமிழலசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை! அழைத்தால் பரிசீலிக்க தயார்! சிவஞானம் அறிவிப்பு



புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு உரியமுறையில் அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நாங்கள் பரிசீலிப்போம் என அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
 அண்மையில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

 அரசியலமைப்பு வரைபு கலந்துரையாடல் மற்றும் கட்சிகளோடு பேசுவதற்கு ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டாலும் கூட கஜேந்திரகுமார் அழைத்த கூட்டத்திற்கு பங்குபற்றுவது தொடர்பில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை.

ஆனபடியால் அதில் கலந்து கொள்வார்களா என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு முடிவு இல்லாதபடியால் அனேகமாக கலந்து கொள்வதற்கு சாத்தியங்கள் குறைவு என்று தான் நினைக்கிறேன். 

ஆனாலும் ஒரு சிலர் சென்று கலந்து கொள்கிறார்களோ என்பதும் எனக்கு தெரியாது. உண்மையில் பங்கேற்பதா? இல்லையா? என்று எந்த முடிவும் கட்சியினால் எடுக்கப்படவில்லை. 

கஜேந்திரகுமாரின் அழைப்பை நாங்கள் நிராகரிக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை. ஆனால் காலப் போக்கில் பரிசீலிக்கலாம் என்ற முடிவோடு தான் இருந்தோம். ஆனால் 25ம் திகதி கூட்டம் தொடர்பாக தெளிவாக தெரியவில்லை. 

தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவராக நான் இருந்தாலும் கூட்டம் தொடர்பில் அறிவிப்போ அழைப்போ எனக்கு கிடக்கவில்லை. இதே போன்று பொதுச் செயலாளருக்கும் கிடைத்ததாகவும் எனக்கு தெரியவில்லை. 

சிறீதரன் எம்பியிடம் தான் குறித்த விடயம் கதைக்கப்பட்டது. அவரும் எம்முடன் இது பற்றி பேசியிருந்தார். ஆனாலும் கட்சிக்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டால் இதை நாங்கள் பரிசீலிக்கலாம். அதற்காக தான் குழு ஒன்றும் நியமிக்கபட்டுள்ளது. அப்படி அழைபபு விடுக்கப்பட்டால் இதை நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post