இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
உலகத் தமிழாராச்சி படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு ஒற்றுமைப்படுவதே தமிழினத்திற்கு மிகவும் பலமாக இருக்கும்.
அவ்வாறான ஓற்றுமையின் ஊடாக ஏற்படுகின்ற பலத்தைக் கொண்டு தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் எல்லோரும் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும். இன்றிருக்கிற நிலைமையில் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஏனெனில் தமிழ்த் தேசியத்திதுடன் பயணிக்கிற எமது வடக்கு கிழக்கு மக்கள் கடந்த தேர்தலில் அதற்கு மாறான பயணத்தில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தவிர்த்துவிட்டு வடக்கு எடுத்துப் பார்த்தால் அதிலும் யாழ்ப்பாணம் மிக மோசமான முடிவுகளை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறான நிலைமைகள் தொடர்வது தமிழினத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகையினால் எங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தலாம்.
அவ்வாறான ஒற்றுமையைத் தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகையினால் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment