கடமை நேரம் மதுபோதையில் தூங்கும் போலீசார் மீது போலீசார் விசாரணை ! - Yarl Voice கடமை நேரம் மதுபோதையில் தூங்கும் போலீசார் மீது போலீசார் விசாரணை ! - Yarl Voice

கடமை நேரம் மதுபோதையில் தூங்கும் போலீசார் மீது போலீசார் விசாரணை !



பணியில் இருக்கும் போது போலீஸ் அதிகாரிகள் பலர் தூங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்தச் சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 "பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூங்கி தகாத முறையில் நடந்துகொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது" என்று SSP மனதுங்க கூறினார்.

 சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் (IGP) சம்பந்தப்பட்ட பிரிவில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.எஸ்.பி மனதுங்க மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post