யாழ் பல்கலைக்கழக இளங்கலை ஆய்வு மாநாடு - Yarl Voice யாழ் பல்கலைக்கழக இளங்கலை ஆய்வு மாநாடு - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக இளங்கலை ஆய்வு மாநாடு



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின்  நான்காவது இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு   இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டின் தொடர்  நிகழ்வுகளில் ஒன்றாகவும், பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டுத் தொடரின் ஓர் அம்சமாகவும் இந்த இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு   நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9 மணியளவில் மாநாட்டின் அழைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். நிரோஷன் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா கலந்துகொண்டார். 

மாநாட்டின் தலைமையாளராகப் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், மற்றும் திறப்புரையாளராக பாலகிருஷ்ணன் சிவதீபன், சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர், கண்காணிப்புப் பிரிவு, இலங்கை மத்திய வங்கி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த மாநாட்டில் கலைப்பீடத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாயக் கற்கைகள் சார்ந்த 132 ஆய்வுக்கட்டுரைகள் பட்டப்படிப்பை  நிறைவுசெய்து வெளியேறும் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.

“மனிதாயக் கற்கைகளிலும் சமூக விஞ்ஞானத்திலும் எழுந்துவரும் போக்குகளும் எதிர்கால திசைகாட்டலும்” என்னும் கருப்பொருளில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாடு, மாணவர்கள் தமது இறுதிவருட ஆய்வுச் செயற்பாட்டின் பேறான ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த ஆய்வுக்கட்டுரைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக அமைந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post