தமிழாராய்ச்சி படுகொலைகள் தான் தற்காப்பு போராட்டத்திற்கு வித்திட்டது. இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகலை செந்நப்பட்டவர்களின் நினைவேந்தலில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..
இந்த மாநாட்டை நடாத்த விடக்கூடாது என்பதில் அப்போதைய ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர். ஆனல் எல்லாவற்றையும் தாண்டி திட்டமிட்டபடி மாநாடு இங்கு நடாத்தபட்டது.
ஆட்சியாளர்களின் தமிழர் விரோத செயற்பாடுகள் அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான தெற்கத்தேய ஆதிக்கம் என்பது அன்று முதல் இன்று வரைமிகத் தெளிவாகவே இடம்பெறுகிறது.
ஆட்சியாளர்களை எதிர்த்து தான் 1974 ஆம் ஆண்டு இந்த மாநாட்டை இந்த மண்ணிலே நடாத்தினார்கள். இதன் போது ஆட்சியாளர்கள் மேற்கொண்ட படுகொலை தான் தற்காப்பு போராட்டத்திற்கு வித்திட்டது.
அதன் பின்னர் தான் ஆயுதப் போராட்டம் பரிணமித்தது. கடந்த முப்பது வருடங்கள் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது இந்தப் படுகொலை நிகழ்வு தான்.இவை உல்லாவற்றைநும் எமது மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைய நிலைமையில் பார்க்கின்ற போது கூட தமிழர் விரோதச் செயற்பாடுகள் மிகத் தெளிவாக இடம்பெறுவது தெரிகிறது.
இவ்வாறான நிலைமையில் திசை மாறிச் செல்கின்ற சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலை எடுத்துப் பார்த்தால் அதிர்ச்சியூட்டும் வகையில் தெற்கத்தைய தலைமைகளுக்கான பிரதிநிதிகளை எங்கள் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.
இது உண்மையாகவே புரிந்து கொள்ள முடியாத நிலையாக இருக்கிறது. தெற்கத்தேய சிந்தனைகளையும் எங்களது சிந்தனைகளையும் எமது மக்களே புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே எங்களக்குள்ளே இருக்கிற கருத்து வேறுபாடுகள் எவ்வாறு இருந்தாலும் எமது மக்களுக்கான தலைமத்துவம் எங்களுடைய மக்களின் பிரதிநிதித்துவம் எங்களுடைய தலைமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர ஒரு தெற்கத்தேய தலமைத்துவதற்திற்கு கீழ் இருக்க கூடாது. ஆக தலைமைத்துவம் எப்போதும் எங்களுடையதாகவே இருக்க வேண்டும் என்றார்.
இனிமேலும் தெற்கத்தேய தலைமைக்கு பின்னால் செல்லாமல் தமிழ்த் தரப்புக்களை அது எதுவாக இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால் அவர்களை ஆதரிக்க வேண்டும்.
ஆகையினால் கடந்த தேர்தலில் தெற்கத்தேய தலைமைகளுக்கு வாக்களித்தவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இனிமேல் அடுத்து தேர்தல்கள் வருகின்ற தேர்தல்களில் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆகவே இனிமேல் தமிழ்த் தேசியத்தோடு பலமாக நிற்கின்ற நிலைக்கு மக்கள் தம்மை மீளாய்வு செய்ய வேண்டும். நாங்கள் பல்வேறு அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறோம்.
இழப்புக்கள் துன்பங்கள் துயரங்களை நினைவில் நிறுத்தி மாற்றுச் சிந்தனையோடு மீளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்பதுடன் இதனை அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment