யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய 34 ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நிகழ்வும் புதிய நிர்வாகத் தெரிவும் கடந்த புதன்கிழமை(22) யாழ் மாவட்ட சர்வோதய மாநாட்டு மண்டபத்தில் தலைவர் நடராஜா சுகிர்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் க.பாஸ்கரனும் சிறப்பு விருந்தினரான தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனர் வா.தியாகேந்திரனும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
தலைவராக ந.சுகிர்தராஜ்,
செயலாளராக க.ராகுலன்,
பொருளாளராக மோ.பிரியங்கா,
உப தலைவராக ச.செந்தூராசா,
உப செயலாளராக ம.தர்சினி,
நிர்வாக உறுப்பினர்களாக க.ஜீவகமலதாஸ்,க.முகுந்தன்,
ரி.சுமதி,ஏ.கோகுலன்,
பத்திராதிபராக கே.கோபாலகிருஸ்னன் உள்ளிட்டோர் 2025 ஆம் ஆண்டுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment