அனுர அரசே தமிழர்களுக்கு நீதியை வழங்கு! தமிழரை ஏமாற்றுவதா மாற்றம்? சிறிதரன் எம்பி - Yarl Voice அனுர அரசே தமிழர்களுக்கு நீதியை வழங்கு! தமிழரை ஏமாற்றுவதா மாற்றம்? சிறிதரன் எம்பி - Yarl Voice

அனுர அரசே தமிழர்களுக்கு நீதியை வழங்கு! தமிழரை ஏமாற்றுவதா மாற்றம்? சிறிதரன் எம்பி



இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

உயர்காதுகாப்பு வலயம் எனக் குறிப்பிட்டு அந்தப் பகுதிகளுக்குள் மக்களை போக விடாமல் தடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் இரகசியமாக அதிலும் கொரோனா தொற்றுநோய் பரவிய காலத்திலே இரானுவத்தினரை பயன்படுத்தி இந்த விகாரையை அதுவும் தமிழ் மக்களின் காணிகளிலே அமைத்திருப்பது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும். 

சட்டம் என்பது இந்த நாட்டிலே நீதியானதாக சம்மானதாக இருந்தால் அது எல்லோருக்கும் உரியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் சொல்லிருக்கிறோம். 

குறிப்பாக தம்புள்ளையில் 30 ஆண்டுகளக்கு மேலாக இருந்த காளி கோவிலை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி பௌத்த பிக்குமாருடைய வேண்டுகோளுக்கு இணங்க இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் இந்து கோவில் இப்படி இடித்தழிக்கலாம் என்றால் யுத்தத்திற்கு பிற்பாடு கடந்த பத்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட இந்த விகாரையை சட்டத்தின் பிரகாரம் ஏன் இடிக்க முடியாது என்ற கேள்வியைத் தான் நாங்கள் கேட்டிருக்கிறோம்.

ஏனென்றால் இது தமிழர்களின் காணி அவர்களின் சொந்த நிலம் அவர்கள் வாழுகின்ற நிலம் இங்கே விகாரைக்கென ஓதுக்கப்பட்ட அல்லது விகாரை இருந்த இடத்திலே விகாரை கட்டியிருந்தால் யாரும் அதைப் பற்றி கேட்கப் போவதில்லை. 

இந்த இடம் எங்களுடைந பூர்வீக நிலம். இந்த விகாரையை மையப்படுத்தி இதனைச் சுற்றி இப்பொழுது 14 ஊக்கருக்கு மேற்பட்ட காணியை மீண்டும் கபளீகரம் பறிக்க முயற்சிப்பது மிகப் பெரிய அராஜகம். 

இந்த அராஜகங்களுக்கு எதிராகத் தான் காணி உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் மக்கள் ஓன்று திரண்டு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். 

இந்தப் போராட்டம் பல பேரின் முயற்சியினாலும் மக்களிண் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிற இந்த நேரத்தில் இன்னும் இந்தப் போராட்டங்கள் விரிவடைய வேண்டும். 

அரசாங்கம் இதனை சரியான முறையில் அனுக வேண்டும்.  இப்போது இருக்கிற அரசு நடுநிலையோடு இருக்கிறது. சிஸ்டம் சேஞ்சை உருவாக்குகிறது மாற்றத்தைப் பற்றி சிந்திக்கிறது என்றால் இந்த மக்களுடைய காணியை உடன் விடுவிக்க வேண்டும். 

அவ்வாறு மக்களுக்கு உறுதிமொழியை வழங்கி தீர்வை ஏற்படுத்த வேண்டும். அல்லது இழுப்புசப்பாக தாங்கள் ஏற்ற இறக்கமாக கதைப்பதை நிறுத்தி நீதியை வழங்குவதற்கு தயாராக வேண்டும். 

கொழும்பில் கூட பல விகாரைகள் இரவோடிரவாக இடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தமிழர் பகுதிகளில் கோவில்கள் சட்டத்திற்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் அழிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றையெல்லாம் தாண்டி இங்கே தமிழர்களின் நிலத்தைப் பறித்திருப்பது அபாயகரமானது.

ஆகவே நாங்கள் மீண்டும் சர்வதேச சமூகத்திடமும் அரசிடமும் நாங்கள் முன்வைக்கின்ற கோரிக்கை ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் அழிப்பும் தமிழில் பகுதிகளில் தொடர்ந்தும் நடைபெறுகிறது. 

இதேபோன்று தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுவதெல்லாம் தமிழர் நிலங்களை பறித்தெடுக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் தான்.

இவற்றை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு முயற்சியினுடைய கட்டம் என்பதைத் தான் மக்களினுடைய திரட்சி காட்டுகிறது. இதே போன்று தீர்வை அரசாங்கம் வழங்காவிடின் அடுத்துவரும் காலங்களில் போராட்டம் தொடரும்.

அரசாங்கம் இதற்கு நீதியான நியாயமான முடிவு வழங்க முன்வர வேண்டும். தவறினால் 1இன்னுமொருமுறை விளைவை ஏற்படுத்தும். அல்லது இந்த நாட்டிலே நீதியற்ற சிங்கள அரசினுடைய முகத்தை இன்னும் துலாம்பரமாக காட்டும்.

 உண்மையல் நீதியான அரசாக இந்த அரசாங்கம் இருக்கும் என்றால் உண்மையில் நீதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post