இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் சம்பந்தமாகவும் அதனை எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ளலாம் என்கின்ற விடயங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது பரிசீலிக்கப்பட்டது.
அத்தோடு தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஏனையோரையும் இணைத்துக் கொள்ளலாமா என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. ஆனால் இப்பொழுது தெளிவாகவே நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம்.
அதாவது ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேசி முடிவெடுப்பதென தீர்மானித்து உள்ளோம். அதேநேரம் இரண்டு கட்சி தலைவர்களுடன் நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன்.
ஆகவே நாம் எல்லோரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை அனுசரித்து நாங்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் செநற்பட வேண்டும்.
எங்களுடைய அரசியல் வாழ்க்கைகள் அரசியல் நடவடிக்கைகள் 1944 இல் இருந்து ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை தமிழ்த் தேசியம் என்பது தான்.
குறிப்பாக தந்தை செல்வநாயகம் வன்னியசிங்கம் மற்றும் ஜீ்ஜீ பொன்னம்பலம் காலத்திலே தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று சொல்லி வந்த போது நானும் கூட அதில் நின்று சத்தம் போட்டிருக்கிளேன்.
ஆனால் இப்பொழுது அந்த நிலை இருக்கிறதா என்று கேட்டு பார்த்தால் சில நேரங்களில் தலைகுனித்து நிற்கிற நிலை தான் இருக்கிறது.
மத்தியிலே வருகிற ஐனாதிபதி எப்போதும் சிங்களவராகத் தான் இருக்க முடியும். மத்தியில் இருக்கிற ஆட்சியும் சிங்களதேசிய ஆட்சியாகத் தான் இருக்க முடியும். அவ்வாறான நிலையில் நாங்கள் எங்கள் தனித்துவத்தைப் பேணிக் கொண்டு செயற்பட வேண்டும்.
அதிலும் உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய தலைமை உள்ள கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியுமென்று நான் நம்புகிறேன். அதற்காக இன்னும் சிலரோடு பேச வேண்டி இருக்கிறது.
தமிழ்த் தேசிய கட்சிகள் தான் தாம் சுதந்திரமாக நின்று மத்தியில் இருக்க கூடிய ஐனாதிபதியுடனோ அரசாங்கத்துடனோ பேசக் கூடிய சுயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதேநேரம் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் எவ்வாறாயினும் அந்த தலைமைக்கு கட்டுப்பட்ட உறுப்பினர்களாகவே இருப்பார்கள். சுயமாக நின்று பேசக்கூடிய ஆளுமை அவர்களுக்கு இருக்காது்
ஆகையினல் நாங்கள் தீர்மானித்த அடிப்படையில் எங்களுடைய மக்கள் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை மக்களிடத்தே முதலில் முன்வைக்க விரும்புகிறோம்.
அதற்கு பிறகு ஏனைய கட்சிகளோடு நாங்கள் பேசி சில நேரங்களில் மாவட்டங்களில் சில வேறுபாடுகள் அமையக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றையும் கருத்திற் கொண்டு தனித்தனியாக இணக்கப் பாட்டோடு போட்டி போடுவது தான்.
அதாவது எந்தக் கட்சியும் இன்னொரு தமிழ்க் கட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாமல் தேசிய நலன்சார்ந்து ஒன்றாக போட்டியிடுவது அல்லது தமிழரசுக் கட்சியின் பட்டியலிலே இப்பொழுது பல வெற்றிடங்கள் இருக்கிறது என்பதால் மற்றக் கட்சிகளின் வேட்பாளர்களை அந்தப் பட்டியலில் இணைத்துக் கொண்டு ஒரு பட்டியலும் இன்னொரு பட்டியலும் இணைந்த பட்டியலாக போட்டியிட முடியுமா என்பதை நாங்கள் பரிசீலிக்க வேண்டும்.
ஆனால் முக்கியமானது தமிழ்த் தேசியம் என்ற நிலைப்பாடு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் முன் கூட்டாக முன்வைக்க வேண்டும் என்பமை நான் எதிர்பார்க்கிறேன்.
மிக அண்மைக் காலத்தில் எல்லா தமிழ்த் தேசிய கட்சிகளைச் சார்ந்தவர்களும் இந்தக் கருத்தை அனுசரித்து ஒரு ஊடக சந்திப்பில் ஒருமித்த கருத்தை மக்களுக்கு தெரிவிக்க கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எங்களால் எடுக்கப்படுகிறது.
ஆகவே இந்த செய்திய மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டுமென ஊடகவியலாளர்களை கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த் தேசியத்தை வெறுமனே பேசிக் கொண்டிருக்க முடியாது. நடைமுறையிலே அது வர வேண்டும்.
மக்களிடத்தே இன்னுமொரு கருத்து உள்ளது. அது என்னவெனில் அரசாங்க கட்சிகளுடன் போனால் தான் காரியங்கள் நடக்கு என்பது. உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. இது உள்ளூராட்சி விடயங்கள் தேசியம் சார்பில் நாடாளாவிய ரீதியில் எடுக்கப்படுகிற முடிவுகள். ஆகவே உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தெரிந்தவன் என்ற வகையில் எனக்கு இதில் என்ன நடக்கும் என்பதும் தெரியும்.
சில சில நிதி ஒதுக்கீடுகள் விசேடமாக வருமானால் அது எல்லாருக்கும் வரும். நாங்கள் கேட்டு பெறலாம். ஆனால் சுயத்தோடு தனித்துவத்தோடு நின்று உள்ளூராட்சி தலைவர்கள் உள்ளூராட்சி மன்றங்கள் பேச வேண்டுமானால் அவை எங்களுடைய தமிழ் தலைமையினுடைய நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதை வடக்கு கிழக்கில் இருக்ககூடிய எங்களுடைய மக்களுக்கு கட்சிசார்ந்து தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
இது ஒரு முதல் முயற்சி. தொடர்ந்து இந்த விடயங்களை நாங்கள் கட்சி ரீதியாகவும் ஏனைய கட்சிகள் சார்ந்தும் முன்னெடுக்க இருக்கின்றோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஊடகவுயலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
கேள்வி - தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டியிட சந்தர்ப்பம் இருக்கா?
பதில்- தேர்தல் சம்பந்தமாக ஏற்கனவே சில தலைவர்களுடன் பேசியிருக்கிறேன். அதேபோன்று இன்னும் சிலரோடு பேச வேண்டி இருக்கிறது. அது கூட்டமைப்போ இல்லையோ என்பதற்கப்பால் அது எதுவென நாங்கள் பெயர் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் கூட்டாக என்று தான் இப்போது சொல்கிறோம். கூட்டாக வர வாய்ப்பிருந்தால் அதற்கான முயற்சிகள் எல்லாம் எடுக்கப்படும்.
கேள்வி - கூட்டாக என்றால் கட்சி சின்னத்தை விட்டுக் கொடுப்பீர்களா?
அப்படி இல்லை. இதைப் பற்றி எல்லாம் நான் இப்போது பேச விரும்பவில்லலை. ஆனால் ஒன்று மட்டும் நான் அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.
அதாவது கூட்டாக தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்டிசிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதையே தலைவர்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன்.
எங்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கலாம். இதில் இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும். அதாவது என்னைப் பொறுத்தவரையில் போராளிக் கட்சிகள் எவையாக இருந்தாலும் சரி இதுவரையில் எந்தக் கட்சியையும் ஒட்டுக்குழு என்று நான் சொன்னதே கிடையாது.
ஏனெனில் அவர்களும் இனத்திற்காக போராட வந்தவர்கள் தான். ஏனென்றால் போராட்ட வரலாறு ஆரம்பகாலத்தில் இருந்தே எனக்கு தெரியும். ஆக அவர்களும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் தான். வழிமாறி அல்லது திசை மாறி அல்லது கருத்துக்களில் மாற்றம் கொண்டதாக இருக்கலாம்.
ஆனால் அவர்கள் ஒருவேளை எங்களுடன் ஒத்து வராவிட்டாலும் கூட எங்களுடைய இந்தக் கருத்து நிலைப்பாட்டையாவது அவர்கள் ஆதரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நாம் எடுத்துள்ள முயற்சியின் கருத்து நிலைப்பாட்டை அவர்கள் ஆதரிப்பார்களாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது.
கேள்வி - உங்கள் கட்சியின் முன்னாள் எம்பி சுமந்திரன் ரெலோ புளொட் போன்ற கட்சிகளை ஒட்டுக்குழுக்கள் என கூறியது மட்டுமல்லாமல் தமிழரசு தனியாக போட்டியிட வேண்டுமென செல்லியிருந்தார். ஆனால் இப்போது பொதுச் செயலாளராக வந்த பின்னர் தனது அந்த நிலைப்பாட்டை ஏதும் மாற்றுயுள்ளாரா?
பதில் - அவர் மாற்றியிருக்கிறாரா இல்லையா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இப்போது கட்சியில் அவர் செயலாளராக இருக்கிறார் நான் தலைவராக இருக்கிறேன் என்னைப் பொறுத்தவரையில் கட்சியினுடைய நிலைப்பாட்டை நான் கூறுகிறேன். முன்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லியிருப்பார்கள். இப்போது எங்களுடைய நிலைப்பாடு இது தான் என்று நான் சொல்லுகிறேன். அதாவது சமகால அரசியலில் இருந்து தான் நான் பேசுகிறேன்.
கேள்வி - தேசிய மக்கள் சக்தியின் அலையின் அச்சத்தினால் தான் தமிழ்த் தேசிய தரப்பு கூட்டு முயற்சியா?
பதில் - அப்படி இல்லை. தமிழினம் யாருக்கும் எப்போதும் பயந்ததில்லை. ஆயுதப் போராட்டத்திற்கும் தமிழினம் பயப்பிட்டதில்லை. அரசியல் போராட்டத்திற்கும் தமிழினம் பயந்தது கிடையாது. ஆக யாருக்கும் பயந்து இப்ப இந்த முடிவை எடுக்கவில்லை. எங்க இருந்தாலும் தாயகம் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் பற்றி தானே சொல்கின்றனர். இந்த தன்னாட்சிக்குள்ளே தனித்துவம் சுய கௌரவம் சுயமானம் அடங்கியுள்ளது. அதற்காகவே நாம் இச் செயற்பீட்டை முன்னெடுக்கிறோம். ஆக எங்களுக்கு பயம் இல்லை.
கேள்வி - உள்ளூராட்சி தேர்தல் முறைமை என்பது தனித்தனியாக போட்டியிட்டால் தான் அதிக தமிழ்த் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியுமென்றும் தேர்தலை தனித்தனியாக எதிர்கோண்டு பின்னர் ஆட்சியை பிடிக்கலாம் என தமிழரசுக் கட்சி கருதுகிறதா?
தேர்தல் தொடர்பில் நாங்கள் கூடிப் பேசி ஒரு முடிவிற்கு வருவோம். அது தனித்தனியாகவோ கூட்டாகவோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி - தமிழரசுக்கட்சியின் இந்த நடவடிக்கை தேர்தலை கூட்டாக எதிர்கொள்வதா அல்லது தனிதனியாக போட்டியிட்டு கூட்டாக ஆட்சியமைப்பதா?
கூட்டாக எதிர்கொள்வது என்பது தான் எங்களுடைந நிலைப்பாடு. சில சமயங்களிலே இரண்டு அல்லது மூன்று அணிகளாக கூட போட்டியிட வாய்ப்புக்கள் இருக்கலாம். அது பரிசீலிக்கப்படும். முழு உள்ளூராட்சி சபைகளையும் தமிழ்த் தேசிய தலைமைகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அது வாய்ப்பாக அமையுமானால் அதை நாங்கள் நிச்சயமாக அமுல் செய்வோம்.
எல்லோரும் ஒண்றிணைய வேண்டுமென கருதும் தமிழரசுக் கட்சியானது முதலில் தமிழரசுக் கட்சியில் இருநது
பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் செயற்பாடுகளை எடுக்கிறதா? அந்த முயற்சி இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
இதில் தனித்து நான் எதனையும் சொல்லவில்லை. எங்கள்
கட்சியில் ஒரு முடிவு இருக்கிறது. இதில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அதாவது கட்சியில் இருந்து விலகாமல் விலகிப் போய் எதிரணியில் இருந்து போட்டியிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதென மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
போட்டியிட்டவர்களை விடுத்து ஏனையவர்களிடம் விளக்கம் தான் கோரப்பட்டுள்ளது. விளக்கம் கோருவதென்பது நீக்குவதல்ல. சரியான விளக்கம் சொன்னால் ஒழுக்காற்று குழு விசாரித்து பொருத்தமான தீர்வை எடுக்கும்.
கேள்வி - பொதுச் செயலாளர் பதவியை தொடர்ந்து வகிக்க முடியாத அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிக்கத்திற்கு சுகயீனமா.
அவருக்கு உடல் நிலையில் பிரச்சனை இருக்கிறது. இந்தியாவில் சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்கிறது. அதேநேரம் முன்னர் இருந்த்தை விடவும் இப்போது பாராளுமன்ற பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.
அதுவும் வன்னியில் காணி அபகரிப்பு ஆக்கிரமிப்பு எல்லைப் பிரச்சனையும் இருக்கிறது. அவற்றையெல்லாம் கையாள வேண்டுமென தானாகவே முன்வந்து பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகிற அதே நேரத்தில் அவரை ஆதரித்த சிறிதரன் எம்பிக்கும் ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதா?
அரியநேத்திரனுக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான கடிதமும் அவருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
சிறிதரனை பொறுத்தவரையில் மத்திய செயற்குழுவில் இந்த விடயம் பரிசீலிக்கப்படுகிற பொழுது தெளிவாகவே பொது வேட்பாளரை தான் ஆதரிக்க போகிறேன் என்று சொல்லியிருந்தார்.
இதன்பின்னர் பாராளுமன்ள தேர்தலில் வேட்பாளர் தெரிவில் கூட இந்தப் பிரச்சனை வந்தது. அவர் கட்சிக்கு சொல்லிப் போட்டு தான் ஆதரித்தவர். அது அப்படியே தான் இருக்கிறது. அவருக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேவேளை சிறிதரனை கட்சியில் இருந்து நீக்க போவதகாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து சிறிதரனை யாராவது கட்சியில் இருந்து நீக்கப் போகிறீர்களா என நான் கேட்டிருந்தேன்.
அப்படி ஒருதரும் நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் வாய்க்குவந்தபடி சொல்லி திரிகின்றனர். உண்மையல் சிறிதரனை கட்சியில் இருந்து நீக்கும் எண்ணமே கிடையாது என தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.
Post a Comment