முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீ்ண்டும் பாராளுமன்றத்திற்கு?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவருடன் இணைந்து செயற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர்.
Post a Comment