நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டில் பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மல்வத்து அஸ்கிரி மகா நா தேரர்கள் தலைமையிலான காரக மகா சங்க சபையின் விசேட கோரிக்கைக்கு அமைய, சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் விசேட தலதா கண்காட்சியை நடத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
மல்வத்து அஸ்கிரிய பெரியோர்கள் தலைமையில் தியவதன நிலமேவுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
Post a Comment