யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி. அமல்ராஜ் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக 06 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்,
அவர் யாழ் மாவட்டத்தில் இருந்த காலப்பகுதிகளில் நிதி, நிர்வாகம் தொடர்பான. பயிற்சி வகுப்புகள் மற்றும் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வகுப்புக்களை நடாத்தி பல பேருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி புரிந்துள்ளார் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருடைய சேவைகாலத்தில் 04 தேர்தல்களை நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை யாழ்மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சேவையினை வழங்கியிருந்தார்.
மேலும், தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை மிகவும் நேர்த்தியாக கையாளுபவர்
என்ற பாராட்டையும் பெற்றவர்.
அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும்முகமாக நேற்றைய தினம் (24) மாவட்ட செயலகத்தில் கெளரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம.பிரதீபன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment