நாம் ஒன்றுசேராவிடின் வரலாறு எம்மை மன்னிக்காது - சிறீதரன் எம்.பி - Yarl Voice நாம் ஒன்றுசேராவிடின் வரலாறு எம்மை மன்னிக்காது - சிறீதரன் எம்.பி - Yarl Voice

நாம் ஒன்றுசேராவிடின் வரலாறு எம்மை மன்னிக்காது - சிறீதரன் எம்.பி



தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக் கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு இனத்தின் அடையாளத்தை முன்னிறுத்திய பயணமாகும்.

இவ்வாறு இலங்கைத் தமிழர சுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை அனுப்பி வைத்தமை தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சுமார் 80 வருடங்களாக தமிழர்களாகிய நாம் உரிமைப்பசியுடன் வாழ்கிறோம். அந்த உரிமைப்பசிக்காக நாம் செய்த தியாகங்கள் அளப்பரியவை. இவ்விடயத்தில் நாம் (தமிழரசுக் கட்சி) மாத்திரமன்றி, தமிழ்த்தே சியத்தை நேசிக்கும் சகல கட்சிகளும் இணைந்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். ஆகவே தமிழர்கள் ஒரு பல மான சக்தியாக ஒன்றுபட்டு அவர் களது கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்றே சர்வதேச சமூகம் விரும்புகிறது. அவ்வாறிருக்கையில் நாம் எமக்குள் போட்டியிட்டு, மனக்கசப்புகளுடன் ஒருவரிலிருந்து ஒருவர் விலகி நின்றால், எமக்கான தீர்வென்பது கிட்டாமலே போய்விடும்.

மக்கள் எமக்கு வழங்கியா ஆணைக்கு அமைய செயற்படடவேண்டும். மாறாக அதிலிருந்து விலகிச்சென்றால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது- என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post