அர்ச்சுனாவிற்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த மனோகணேசன்! - Yarl Voice அர்ச்சுனாவிற்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த மனோகணேசன்! - Yarl Voice

அர்ச்சுனாவிற்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த மனோகணேசன்!



 சில நபர்கள், தன்நிலை மறந்த சூட்டில் உளரும் போது, திருப்பி, திருப்பி, சொல்லியும், கேட்காமல் தொடர்ந்து "சமூக தூஷணம்" பேசும் போது, அவர்கள் மீது, தண்ணீரை தெளித்து, குளிர வைத்து, சூட்டை குறைப்பது உலகில் அங்கீகரிக்க பட்ட தண்ணீர் பாஷையாகும். 

ஏனென்றால், சில நேரங்களில் சில மனிதர்களுக்கு, வாயால் பேசும் மொழி புரிவதில்லை. தர்க்கம், நீதி, நியாயம் என்று எதை எடுத்து சொன்னாலும் கேட்கும் நிலையில் அவர்கள் இருப்பதில்லை. 

இன்னமும் பல பாஷைகள் உள. ஆனால் இருப்பதில் நாகரீகமான பாஷை, இந்த தண்ணீர் பாஷைத்தான்.  

ஆகவே, சம்பவம் நடக்க கூடாது என விரும்புகிறேன்.  இல்லை, நான் திருந்தவே  மாட்டேன் என அடம் பிடித்தால், பகிரங்கமாகவே நடக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அர்ச்சுனா இராமநாதனை சாடியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post