யாழ், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எலும்பு எச்சங்கள் தென்பட்டுள்ள நிலையில், அவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான இடத்துக்குச் சென்று நாங்கள் நேரில் பார்வையிட்டிருந்தோம். அங்கு காணப்பட்ட மனித எலுப்பு எச்சங்கள் எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்டவை போன்று தென்பட்டமையால் நாம் இது தொடர்பில் கூடிய கரிசனை கொண்டிருந்தோம்.
யாழ்ப்பாணம் நீதிமன்றம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியிருப்பது நம்பிக்கையளிக்கின்றது. தேவை ஏற்ப டின் சர்வதேச தரப்பிலான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ் புதைகுழி போர் நடைபெற்ற காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம்.
ஆகையால் இந்தப் புதைகுழி தொடர்பாக நீதியான நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தற்போதைய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம். என தெரிவித்தார்.
Post a Comment