வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்! - Yarl Voice வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்! - Yarl Voice

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று (20)தீச்சட்டி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்றைய தினம் கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்திய போராட்டம் ஒன்றை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து கிளிநொச்சி நகர மையப்பகுதி வரை இட்டுச் சென்றனர்.

  இவ் தீச்சட்டி ஏந்திய போரட்டத்தின் நோக்கமானது, கிளிநொச்சியில் (கந்தசுவாமி ஆலய முன்றலில்)வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் , காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்து என்பதை கண்டறிவதற்காக நீதி கேட்டு ஆரம்பிக்கப்பட்டது. இப் போராட்டமானது இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

எனவே இதனை நினைவுகூறும் முகமாக இன்றைய நாள் அவர்கள்  தீச்சட்டி ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவ் போராட்டத்தின்போது.
அநுர அரசே..
இனப்படுகொலையை மூடி மறைக்காதே.
காணாமலாக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?
நாம் கதறுவதை வேடிக்கை பார்க்காதே...என கோசங்களை எழுப்பியிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post