எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் புதிய நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதன்படி தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியை இராஜினாமா செய்து புதிய நிதியமைச்சருக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இந்த நாட்டின் முக்கிய வர்த்தகர் ஒருவர் நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
நிதி அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், ஆனால் பின்னர் நிதியமைச்சர் பதவி முன்மொழியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
வருண ராஜபக்ச தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைப்பாளராக உள்ளார் மேலும் சில காலத்திற்கு முன்னர் அவர் UNPவை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்.
Post a Comment