வடமாகாணத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியானது தமிழர்களுக்கு போடப்பட்டுள்ள பிச்சை என இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையி்ல்..
35 ஆண்டுகளாக இடம்பெற்ற போரில் வடக்கு,கிழக்கில் எமது சமூகம், மற்றும் நான் உட்பட கட்டிய வீடுகளையும், அனைத்து சொத்துகளையும் இழந்து சென்ற மக்களுக்கு நீங்கள் ஒதுக்கிய நிதி வரவுசெலவு திட்டத்தின் முழுமையான நிதியில் 0.01வீதமே, எங்கள் வீடுகளை இடித்து, எங்கள் வீடுகளை பிடித்து, எம் மக்கள் 45000 பேரை கொன்றுவிட்டு எங்களுக்கு நீங்கள் போட்ட பிச்சைதான் இந்த 0.01வீதம்.
அதே போன்று யாழ்ப்பாண நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதானது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்திற்காக போடப்பட்ட பிச்சை,அது கூட மொத்த நிதியில் 0.0076 வீதமே. வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள் இது உங்கள் வரவுசெலவுத்திட்டத்தின் மொத்த நிதியில் 0.076வீதமே. அதே போன்றுவடக்கு,கிழக்கு சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் அவ்வாறே 0.66வீதம், அனைத்துமே உங்களுடைய வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில், இது ஒரு சிறு தொகை நிதியே அது நீங்கள் எங்களுக்கு போடும் பிச்சை.
நீங்கள் சீனாவிடம் போய் பிச்சை எடுப்பீர்கள், இந்தியாவிடம் போய் பிச்சை எடுப்பீர்கள் அந்த பிச்சையிலே வடக்கு கிழக்கில் உள்ள எங்களுக்கு ஒரு பிச்சையினை போட்டுவிட்டு வடக்கு மக்களுக்கு பெரும் நிதி ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி பெருமை பேசி வருவார்.
காரணம் வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலில் தம்மை பிரபலியப் படுத்துவதற்காகவே இந்த பிச்சை.
ஒரு காலத்தில் நாங்கள் கந்தளாயில் இருந்து உங்களுக்கு சீனி தந்தோம், காங்கேசன்துறையிலிருந்து சீமேந்து தந்தோம். நீங்கள் எங்களுடைய உதிரத்தை எடுத்துவிட்டு போடுகிறீர்களா பிச்சை.
தமிழன் பிச்சை எடுப்பதற்கு தாயாராக இல்லை என்பதை நீங்கள் விழங்கிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் நாங்கள் கொண்டுவருகின்றோம் பில்லியன், ரில்லியன் கணக்கில், நாங்கள் போடுகிறோம் உங்களுக்கு பிச்சை எங்கள் உறவுகள் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தது போடுவார்கள் உங்களுக்கு பிச்சை.
நீங்கள் இந்த தடைச் சட்டத்தை நீக்குங்கள்.நீங்கள் எங்களிடம் தாருங்கள், நாங்கள் காங்கேசன்துறையினை புனரமைத்து அங்கிருந்து உங்களுக்கு சீமெந்தை தருகின்றோம், கந்தளாயிலிருந்து சீனி தருகின்றோம் ஏன் ஆனையிறவில் இருந்து உங்களுக்கு உப்புத்தருகிறோம்.உங்களுக்கு நாங்கள் போடுகிறோம் பிச்சை என பாராளுமன்றத்தில் இன்று கடுமையாக அரசாங்கத்தை விமர்சனம் செய்திருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா.
Post a Comment