ஐனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாக சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இவர்கள் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் தமிழ் மக்களுக்கு ஒன்றையேனும் நிறைவேற்றி உள்ளனரா எனக் கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரகுமார் மதவாதம் இனவாத ரீதியாகச் செயற்படுகிற இனவாதிகள் என்றும் அனுர தரப்பை குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போது நேற்று யார் வந்த ஐனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் கடுமையாக விமர்சித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
ஐனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் அதே போல பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர்.
அதிலும் தமிழ் மக்கள் விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் தீர்வை ஏற்படுத்துவதாக கூறி இருந்தனர்.
ஆனால் ஆட்சிககு வந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தவில்லை. இதுமட்டுமல்லாது இவற்றுக்கு தீர்வை காணுவதற்கு எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை.
இவ்வாறாக மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் மேடைகளில் ஏறி தம்மைப் புனிதர்களாக காட்டி ஏமாற்று வித்தைகளையே செய்து வருகின்றனர்.
இமேபோன்ற தையிட்டி விகாரை விவகாரத்திலும் அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதாக கூறியிருக்கிற ஐனாதிபதி தற்போதும் தாமே அதிகாரத்தில் இருக்கிற நிலைமையில் முதலில் அந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை காண வேண்டும்.
அதைவிடு்த்து தமிழ் மக்கள் விடயத்தில் தாம் ஏதனையும் செய்யாமல் மக்களை ஏமாற்றும் வகையில் மேடைகளில் ஏறி வேறு யார் மீதும் பழியை போட்டுவிட்டு தாம் தப்பிக்க முயலக் கூடாது. எனவே தையிட்டி விகாரை பிரச்சனைக்கு இதயசுத்தியுடன் உடனடியாக தீர்வை ஏற்படுத்த தாயார் என கேட்கிறோம்.
மேலும் இனவாத்த்திற்கு இடமில்லை என்றும் இனவாத்த்திற்கு தாம் இடமளிக்க மாட்டோம் என்றும்
கூறுகிற ஐனாதிபதி இனவாத மதவாத ரீதியாக பரப்புரையை தாங்கள் செய்தொகை மறக்ககூடாது.
தமிழ் மக்கே. விடயத்தில் எப்போதும் இனவாத மதவாத ரீதியாகச் செயற்படுவது ஜேவிபி தான். அந்தக் கட்சியைச் சார்ந்த ஐனாதிபதியின் செயற்பாடுகளும் அவரது பேச்சுக்களும் இனவாதம் தான். அவர்களே உண்மையில் இனவாதிகள் என்றார்.
Post a Comment