அனுர மீண்டும் யாழ் விஜயம்! சோதனைச்சாவடிகள் அகற்றம் - Yarl Voice அனுர மீண்டும் யாழ் விஜயம்! சோதனைச்சாவடிகள் அகற்றம் - Yarl Voice

அனுர மீண்டும் யாழ் விஜயம்! சோதனைச்சாவடிகள் அகற்றம்



ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நேற்று வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியுமே இவ்வாறு தீடீரென அகற்றப்பட்டது. அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.

இதற்காக ஏ9 வீதி மற்றும் பூநகரி வீதிகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பயணம் மேற்கொண்டார்.

ஜனாதிபதி வரும்போது மட்டும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டமை மூலம் அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம் பொலிஸாரால் ஏமாற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அனுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்கு முன்றரும் குறித்த சோதனைச்சாவடிகள் தளர்த்தப்பட்டு சிறிது காலங்களுக்கு பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post