அமெரிக்க அதிபரால் விதிக்கப்படும் புதிய வரிகளில் இருந்து உலகின் மிக ஏழ்மையான மற்றும் சிறிய நாடுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் அந்நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டிய உலகின் 28 ஏழ்மையான மற்றும் சிறிய நாடுகளை அறிக்கை அடையாளம் காட்டுகிறது.
எனினும் அந்த 28 நாடுகளில் இலங்கை இடம்பெறவில்லை.
அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கும் இருபத்தெட்டு நாடுகளின் அளவு மற்றும் மிதமான ஏற்றுமதி அளவுகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது.
Post a Comment