எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மன்னார் பகுதியில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5-6 வருடங்களின் பின்னர் 30,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து சில வீதிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் அனைத்தும் தீர்க்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய நாட்டை தேசிய மக்கள் சக்தி உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் வீதிகள் அமைப்பதற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5-6 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய டாலர் கையிருப்பு ஏற்படும்.இந்த 6 மாத காலத்தில், எண்ணெய் விலையைக் குறைத்தோம், மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தோம், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடுகிறோம், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினோம், வாழ்கை படியை உயர்த்தினோம், அதுமட்டுமல்லாமல், 400,000 பாடசாலை குழந்தைகளுக்கு பாடசாலை உபகரண கொடுப்பனவை வழங்குகிறோம்.
அரசதுறையிலும் தமிழ் பேசுபவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தான் 2,000 பேரை காவல்துறையில் சேர்க்கிறோம். " தமிழ் தெரிந்த உங்கள் குழந்தைகளை காவல்துறையில் சேருங்கள். மரியாதைக்குரிய பணி. நமது நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணி. மேலும் வசதிகள் செய்து தரப்படும். தமிழ் தெரிந்தவர்கள் அரசுப் பணியில் சேர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்." என ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment